ஹர்பஜன் சிங் பிரச்சனைக்கு பின் தான் குடிகாரனாக மாறினேன்! மனைவியிடம் சண்டை என வேதனையடையும் சைமண்ட்ஸ்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் பிரச்சனைக்கு பின்பு என் வாழ்க்கையே சரியத் துவங்கியது, அதன் பின் மிகவும் மோசமான குடிகாரனாக மாறிவிட்டேன் என்று அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கூறியுள்ளார்.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையே கடந்த 2008-ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியில், நடுவரின் சில அடாவடியான தீர்ப்பினால், இந்திய அணியின் வெற்றி பறிக்கப்பட்டது.

இந்த டெஸ்ட் போட்டியில் மட்டும் மொத்தம் 14 தீர்ப்புகள் இந்திய அணிக்கு எதிராக சென்றது. குறிப்பாக அவுஸ்திரேலியா அணியின் அப்போதைய நட்சத்திர வீரராக இருந்த ஆண்ட்ரூ சைமண்ட்சுக்கு மட்டும் 10 முறை நடுவர்கள் அவுட் கொடுக்கவில்லை.

இந்த விவகாரம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவுஸ்திரேலிய வீரர்கள், இந்திய வீரர்களை ஸ்லெட்ஜிங் வேறு செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தேரி மா..ங் கி என்று கூறினார். உடனடியாக ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஹர்பஜன் தன்னைத் தான் குரங்கு என்று திட்டியதாக கூறினார். இதனால் அவுஸ்திரேலியா வீரர்கள் இந்த விவகாரத்தை பூதாகரமாக கிளப்ப, சச்சின் டெண்டுல்கர் தலையிட்டு பிரச்சனையை சுமூகமாக முடித்தார்.

இந்த சம்பவத்திற்கு பின்பு ஏகப்பட்ட குடி சம்பவங்கள், ஒழுங்கீனங்களால் பாதிக்கப்பட்ட ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் அப்போதைய கேப்டன் மைக்கில் கிளார்க்கால் கடுமையாக எச்சரிக்கப்பட்டார்.

இருப்பினும் அவரின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து சைமண்ட்ஸ் ஒழுங்கீனமாக இருந்ததால், அவர் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்த சம்பவம் நடந்து தற்போது பத்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதை மீண்டும் தோண்ட ஆரம்பித்துள்ளார் சைமண்ட்ஸ்.

அவர் அவுஸ்திரேலியா ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், ஹர்பஜன் சிங் விவகாரம் தான் என் வாழ்கையை ஸ்தம்பிக்க விட்டுவிட்டது. அந்தக் கணம்தான் என் வாழ்க்கையின் சரிவு தொடங்கியது.

தன் பின் பின்பு நிறைய குடிக்கத் துவங்கினேன். எனக்கு மனைவிக்கும் பிரச்சனை ஏற்பட்டது. கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன்.

நான் அந்த விவகாரத்தில் என் சக வீரர்களையும் தேவையில்லாமல் இழுத்து விட்டு விட்டேன் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் ஹர்பஜன் சிங் என்னை அவ்வாறு அழைத்தது முதல் முறையல்ல, இந்தியாவில் கூட அதற்கு முந்தைய தொடரில் அவர் என்னை மன்க்கி என்றுதான் அழைத்தார்.

நான் இந்திய ஓய்வறைக்குள் நுழைந்து ஹர்பஜன் சிங்குடன் கொஞ்சம் தனியாகப் பேச முடியுமா என்றேன், அவர் வெளியே வந்தார், நான் அவரிடம், என்னை அப்படி அழைப்பதை நிறுத்தவில்லை எனில் விவகாரம் கையை மீறி போகும் என்று அப்போதே கூறினேன் என்று சைமண்ட்ஸ் கூறியுள்ளார்.

ஆனால் அதன் பிறகு ஐபிஎல் கிரிக்கெட்டில் சைமண்ட்சும், ஹர்பஜன் சிங்கும் மும்பை இந்திய அணிக்கு சேர்ந்து விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்