இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடிய இலங்கை வீரர்கள்: ஒருநாள் தரவரிசையில் முன்னேற்றம்

Report Print Santhan in கிரிக்கெட்

ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் தரவரிசைக்கான புள்ளிப்பட்டியலில் இலங்கை வீரர்கள் அகில தனன்ஜய், நிரோஷன் டிக்வெல்லா முன்னேற்றம் அடைந்துள்ளார்.

இலங்கை-இங்கிலாந்து, வங்கதேசம்-ஜிம்பாப்வே, இந்தியா-மேற்கிந்திய தீவு ஆகிய அணிகளுக்கிடையேயான ஒருநாள் தொடர் தற்போது முடிவு பெற்றுள்ள நிலையில், ஐசிசி ஒருநாள் போட்டி வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனன்ஜய 5 போட்டிகளில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதனால் 651 புள்ளிகள் பெற்று 21-வது இடத்தில் இருந்த இவர் தற்போது 13-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இவரைத் தொடர்ந்து துவக்க வீரரான நிரோசன் டிக்வெல்லா இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2 அரைசதங்கள் உட்பட 192 ஓட்டங்கள் குவித்ததால், 621 புள்ளிகளுடன் 27-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அதே சமயம் இலங்கை அணியின் ஆல் ரவுண்டரான திசாரா பெரேரா 28-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி தொடர்ந்து முதலிடத்தையும், பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா முதல் இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்