விக்கெட் கீப்பிங்கில் புதிய உச்சம் தொட்ட டோனி! முதலிடத்தில் நீடிக்கும் சங்கக்காரா

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் டோனி, 425 பேரை ஆட்டமிழக்கச் செய்து மார்க் பவுச்சரை முந்தியுள்ளார்.

இந்திய அணி வீரர் மகேந்திர டோனி துடுப்பாட்டத்தில் தடுமாறினாலும் விக்கெட் கீப்பிங்கில் தன்னை கிங் என ஒவ்வொரு ஆட்டத்திலும் நிரூபித்து வருகிறார்.

கடந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கீரன் பவுல் கொடுத்த கேட்ச்சை பிடித்ததன் மூலம், டோனி புதிய சாதனையைப் படைத்தார். அதாவது, விக்கெட் கீப்பராக செயல்பட்டு 425 பேரை டோனி ஆட்டமிழக்க செய்துள்ளார்.

இதன்மூலம் 424 வீரர்கள் ஆட்டமிழக்க காரணமாக இருந்த தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சரை முந்தியுள்ளார். அத்துடன், சர்வதேச அளவில் அதிக பேரை ஆட்டமிழக்கச் செய்த விக்கெட் கீப்பர்களில் 3வது இடத்தை டோனி பிடித்துள்ளார்.

டோனி 327 இன்னிங்ஸ்களில் இதனை செய்துள்ளார். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இஅலங்கையின் சங்ககாரா 482 விக்கெட் வீழ்ச்சிகளுடனும், அவுஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் 472 விக்கெட் வீழ்ச்சிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

மேலும், ஒருநாள் போட்டிகளில் டோனி 10,173 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 174 ஓட்டங்கள் ஆசிய அணிக்காக எடுத்தவையாகும். அதனை நீக்கிவிட்டு இந்திய அணிக்காக 9,999 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

எனவே, இன்னும் ஒரு ரன் எடுத்தால் இந்திய அணிக்காக 10 ஆயிரம் ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற பெருமையை பெறுவார். ஆனால், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு துடுப்பாட்ட வாய்ப்பு கிடைக்கவில்லை.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்