சிக்சர் மன்னனாக உருவெடுத்த ரோஹித் ஷர்மா! விரைவாக 200 சிக்சர்கள் அடித்து சாதனை

Report Print Kabilan in கிரிக்கெட்
229Shares

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் ஷர்மா, குறைந்த இன்னிங்சில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில், இந்திய வீரர் ரோஹித் ஷர்மா நான்கு சிக்சர்கள் அடித்தார். இதன்மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்த சிக்சர்களின் எண்ணிக்கை 202 ஆக உயர்ந்தது.

இதன்மூலம், குறைந்த இன்னிங்சில் 200 சிக்சர்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அப்ரிடி, 195 இன்னிங்ஸ்களில் தான் இந்த சாதனையை செய்திருந்தார்.

ஆனால், ரோஹித் ஷர்மா 187 இன்னிங்ஸ்களிலேயே 200 சிக்சர்களை அடித்து அவரது சாதனையை முறியடித்துள்ளார். தற்போது ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார் ரோஹித் ஷர்மா.

மற்றொரு இந்திய வீரர் டோனி இதுவரை 218 சிக்சர்கள் அடித்துள்ள நிலையில், ரோஹித் ஷர்மா இன்னும் 17 சிக்சர்கள் விளாசினால் அவரை முந்திவிடுவார். ஏழு வீரர்கள் மட்டுமே இதுவரை 200 சிக்சர்கள் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி போட்டியில் 63 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம், இந்த ஆண்டில் 1000 ஓட்டங்களை கடந்துள்ளார் ரோஹித் ஷர்மா.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்