டோனி கைவிட்டாலும்..கோஹ்லியிடம் உறுதியாக அவுட் சொன்ன ஜடேஜா: வைரலாகும் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ரிவ்யூ கேட்பதில் டோனி கைவிட்டாலும், ஜடஜா உறுதியாக அவுட் என்று கூறி, சரியான முடிவை எடுத்துள்ளார்.

இந்தியா-மேற்கிந்திய தீவு அணிகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி நேற்று கேரளாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 3-1 என்று கைப்பற்றி அசத்தியது.

இப்போட்டியில் மேற்கிந்திய தீவு அணி இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, இந்திய அணி சார்பில் 16-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா வீசினார்.

அதை மேற்கிந்திய தீவு அணியின் அபாயகரமான வீரரான ஹெட்மயர் எதிர்கொண்டார். அப்போது 5-வது பந்தில் ஜடேஜா எல்.பி.டபில்யூவுக்கு அப்பீல் செய்தார்.

ஆனால் நடுவர் அவுட் இல்லை என்று கூற, உடனடியாக ஜடேஜா அவுட் என்றும் ரிவ்யூ கேட்கும் படியும் கோஹ்லியிடம் கூறினார்.

இது குறித்து டோனியிடம் கேட்ட போது, எனக்கு சரியாக தெரியவில்லை என்று கூற, கோஹ்லி, ஜடேஜாவின் பேச்சை நம்பி ரிவ்யூ கேட்டார்.

மூன்றாவது நடுவர் அதை பார்த்த போது, அவுட் என்பது உறுதியானதால், ஹெட்மயர் வெளியேறினார். இந்திய வீரர்கள் அனைவரும் ஜடேஜாவை பாராட்டினர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்