டி20 போட்டியில் டோனி அதிரடியாக நீக்கப்பட்டதற்கு என்ன காரணம்? வெளிப்படையாக பதிலளித்த கோஹ்லி

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியில் ரிஷப் பாண்டிற்கு வாய்ப்பளிக்கவே டோனி ஒதுங்கியதாக அந்த அணியின் தலைவர் கோஹ்லி விளக்கமளித்துள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டோனி மேற்கிந்திய தீவு மற்றும் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டோனியின் பேட்டிங் தான் சிறப்பாகவே இல்லையே தவிர, அவருடைய கீப்பிங் மற்றும் அனுபவம் இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடித் தந்துள்ளது. இதனால் அவர் அணிக்கு தேவை என்று முன்னணி வீரர்கள் பலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் தலைவரான கோஹ்லி, டோனி டி20 தொடரில் இடம் பெறாததற்கு காரணம் குறித்து தேர்வு குழுவினர் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டனர் என்று நினைக்கிறேன்.

அணியிலிருந்து நீக்குவதற்கு முன்பு, தேர்வாளர்கள் அவரிடம் முதலில் பேசியிருப்பார்கள். டோனி சம்பந்தமாக தேர்வாளர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. இந்த விஷயத்தில் பல்வேறு விதமான கருத்துகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அவை உண்மை அல்ல என்பதை உறுதியாக கூறுகிறேன்.

டோனி இன்னும் இந்த அணியில் முக்கியமான வீரராகத் தான் இருக்கிறார். 20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தவரை ரிஷாப் பான்ட் போன்ற இளம் வீரர்கள் அதிக வாய்ப்பு பெற்றால் நன்றாக இருக்கும் என்று அவரே கருதுகிறார்

ஒரு நாள் போட்டியில் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார். அந்த கோணத்தில் பார்த்தால் அவர், இளம் வீரர்களுக்கு உதவுவதற்கு முயற்சிக்கிறார் என்றே தோன்றுகிறது. மற்றவர்கள் நினைப்பது போல் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்