பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் திடீர் ஓய்வு அறிவிப்பு

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அசார் அலி, ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரரான அசார் அலி(33), அந்த அணியின் தலைவராக செயல்பட்டு வந்தார்.

சாம்பியன்ஸ் கிண்ண போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 59 ஓட்டங்கள் எடுத்து தமது அணியை வெற்றி பெற வைத்தார்.

ஆனால், மோசமான ஃபார்ம் காரணமாக அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட அசார் அலி, கடைசியாக நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடினார். அவருக்கு பதிலாக சிறப்பாக செயல்பட்டு வரும் இமாம் உல் ஹக் அணியில் நிலையான இடம் பிடித்துவிட்டார்.

இதனால், கடந்த ஆண்டு தனது தலைவர் பதவியில் இருந்து அசார் அலி விலகினார். தற்போது சர்ப்பராஸ் அகமது பாகிஸ்தான் அணியின் தலைவராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அசார் அலி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘நன்றாக யோசித்த பிறகே இந்த முடிவை எடுத்துள்ளேன். பாகிஸ்தான் அணியில் ஒருநாள் போட்டியில் சிறப்பான வீரர்கள் இருக்கிறார்கள். இளம் வீரர்களுக்கு வழிவிட்டு இந்த முடிவை எடுத்துள்ளேன்.

அடுத்து உலகக் கிண்ண போட்டி வர இருக்கிறது. கிண்ணத்தை வெல்ல பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனி டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். பாகிஸ்தான் அணியின் கேப்டனாகவும் எனக்கு நல்ல நினைவுகள் உள்ளன. இந்த முடிவை மகிழ்ச்சியுடனேயே எடுத்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

இதுவரை 53 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அசார் அலி, 1845 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் மூன்று சதங்களும், 12 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 102 ஓட்டங்களும், 36.9 சராசரியையும் வைத்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்