இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: அணியை சரிவில் இருந்து மீட்ட சேஸ்-ஹோல்டர்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட் இழப்புக்கு 295 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி, ஹைதராபாத்தில் இன்று தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பாட்டத்தை துவங்கியது.

அதன்படி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 113 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. ஹோப் 36 ஓட்டங்களில் அவுட் ஆனார்.

அதன் பின்னர் இணைந்த ரோஸ்டான் சேஸ், டவுரிச் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். எனினும் டவுரிச் 30 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய அணித்தலைவர் ஹோல்டர் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். இதற்கிடையில் சேஸ் அரைசதம் கடந்தார்.

அதன் பின்னர் அரைசதம் கடந்த ஹோல்டர் 92 பந்துகளில் 52 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில், மேற்கிந்திய தீவுகள் அணி 95 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 295 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

ரோஸ்டன் சேஸ் 174 பந்துகளில் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 98 ஓட்டங்களுடனும், பிஷு 2 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணித் தரப்பில் குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

PTI

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers