ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக முறை ஆட்ட நாயகன் விருந்து பெற்ற டாப் 10 வீரர்கள்! முதலிடத்தில் யார் தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்

தற்போது உள்ள கிரிக்கெட் உலகில் ஒவ்வொரு அணியில் சரியான துடுப்பாட்ட வீரர்களின் வரிசை மற்றும் சரியான பந்து வீச்சாளர்கள் என இருந்தால், சாதிக்க முடியும்.

ஏனெனில் இப்போது இருக்கும் இளம் வீரர்கள் தங்களுடைய சிறப்பான பந்து வீச்சு மற்றும் அதிரடி ஆட்டம் மூலம் போட்டியை எப்போது வேண்டும் என்றாலும் மாற்றிவிடும் அளவிற்கு திறமை படைத்தவர்களாக உள்ளனர்.

துவக்கத்தில் ஒரு வீரர் சரியாக விளையாடியிருப்பார், அதன் பின் இறுதிக் கட்டத்தில் ஒரு வீரர் அற்புதமாக விளையாடி ஆட்டத்தை முடித்து வைப்பார். இறுதியில் இந்த வீரர்களில் யாருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்படும் என்று ரசிகர்கள் பலருக்கும் கேள்வி எழும்பும்.

இந்நிலையில் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக முறை ஆட்டநாயகன் விருது பெற்ற டாப் 10 வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அரவிந்த் டி சில்வா(10)

10-வது இடத்தில் 1990-ஆம் ஆண்டுகளில் இலங்கை அணியின் நட்சத்திர வீரராக இருந்த அரவிந்த் டி சில்வா உள்ளார். இவர் 308 ஒருநாள் போட்டிகளில் 30 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார்.

பிரையன் லாரா(9)

மேற்கிந்திய தீவு அணியின் அதிரடி ஆட்டக்காரராக இருந்தவர் தான் பிரையன் லாரா. இவரது துடுப்பாட்டத்தின் ஸ்டைல் அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும். இவர் 299 ஒருநாள் போட்டிகளில் 30 ஆட்டநாயகன் விருதுகளை பெற்றுள்ளார்.

குமார் சங்ககாரா(8)

இலங்கை அணியின் ஜாம்பவான் என்றழைக்கப்படும் குமார் சங்ககாரா 404 ஒருநாள் போட்டிகளில் 31 முறை ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார்.

சவுரவ் கங்குலி(7)

இந்திய அணியின் வெற்றிக் கேப்டன்களில் ஒருவர் தான் சவ்ரவ் கங்குலி, இவர் 311 ஒருநாள் போட்டிகளில் 31 முறை ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார்

சர் விவியன் ரிச்சர்ட்ஸ்(6)

மேற்கிந்திய தீவு அணியின் ஜாம்பவானான விவியன் ரிச்சர்ட்ஸ் 187 ஒருநாள் போட்டிகளில் 31 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.

சயித் அப்ரிடி(5)

பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களாலும் பூம் பூம் அப்ரிடி என்றழைக்கப்பட்ட இவர் 398 ஒருநாள் போட்டிகளில் 32 முறை ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார்.

ரிக்கி பாண்டிங்(4)

அவுஸ்திரேலியா அணியின் ரன் மிஷின் என்றழைக்கப்படும் ரிக்கி பாண்டிங் 375 ஒருநாள் போட்டிகளில் 32 முறை ஆட்ட நாயகன் விருதை பெற்றுள்ளார்.

ஜாக் காலிஸ்(3)

தென் ஆப்பிரிக்கா அணியின் சிறந்த ஆல்ரவுண்டராக இருந்த காலிஸ் 328 ஒருநாள் போட்டிகளில் 32 முறை ஆட்டன் நாயகன் விருதை பெற்றுள்ளார்.

சனத் ஜெயசூர்யா(2)

எதிரணி வீரர்களை கதிகலங்க வைக்கும் இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரரும், முன்னாள் வீரருமான ஜெயசூர்யா 445 ஒருநாள் போட்டிகளில் 48 முறை ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர்(1)

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் 463 ஒருநாள் போட்டிகளில் 62 முறை ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers