மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான தொடரில் தமிழக வீரர் அதிரடி நீக்கம்! இளம் வீரருக்கு வாய்ப்பு

Report Print Santhan in கிரிக்கெட்

மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கான வீரர்களின் பட்டியலில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளார்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவு அணி இங்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி நாளை துவங்கவுள்ளது.

இந்நிலையில் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் சர்மா, ஷிகர் தவான், ரிஷப் பந்த், டோனி, அம்பத்தி ராயுடு, மணிஷ் பாண்டே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஷமி, கலீல் அகமது, சர்துல் தாக்கூர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், ஆசியக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தைக் கொடுத்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

தினேஷ் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆசியக்கோப்பை தொடரில் ஹாங்காங் அணியுடன் 33 ஓட்டங்களும், பாகிஸ்தான் அணியுடன் 31 ஓட்டங்களும், சூப்பர் 4-ல் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இக்கட்டான போட்டியில் 44 ஓட்டங்களும் எடுத்தார்.

அதுமட்டுமின்றி அப்போட்டியில் சர்ச்சைக்குரிய முறையில் இவரும், டோனியும் அவுட்டாகினர். இறுதிப் போட்டியிலும் 37 ஓட்டங்கள் என ஒரு சராசரியான ஆட்டத்தை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்