சாதனைப் பட்டியலில் இணைந்த ஷிகர் தவான்: எதில் தெரியுமா?

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷிகர் தவான் ஒரே இன்னிங்சில் 4 கேட்சுகளை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில், வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.

அதேபோல் பீல்டிங்கில் இந்திய அணி கலக்கியது. குறிப்பாக, துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் நான்கு கேட்சுகளை பிடித்து அசத்தினார். நஸ்முல் உசேன், ஷிகிப், மெஹிதி, முஸ்தபிஸுர் ஆகிய வீரர்களின் கேட்சுகளை பிடித்து வெளியேற்றினார்.

இதன்மூலம், ஒரே இன்னிங்சில் 4 கேட்சுகளை பிடித்த இந்திய வீரர் என்ற சாதனைப் பட்டியலில் தவான் இணைந்தார்.

ஏற்கனவே கவாஸ்கர், சச்சின், டிராவிட், கைப், அசாருதீன், வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் ஆகியோர் இந்த சாதனை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PTI

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்