இது எங்களுக்கு சாதகமான ஒன்று தான்: பாகிஸ்தானின் ஹசன் அலி

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

ஆசிய கிண்ணத் தொடரில் விராட் கோஹ்லி இல்லாதது பாகிஸ்தானுக்கு சாதகமான ஒன்று என அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

ஆசிய கிண்ணக் கிரிக்கெட் போட்டி வருகிற 15ம் திகதி முதல் 28ம் திகதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது.

இதில் 19ம் திகதி இந்திய அணி பாகிஸ்தானை சந்திக்கிறது, கோஹ்லிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் ரோஹித் சர்மா அணித்தலைவராகியுள்ளார்.

இந்நிலையில் கோஹ்லி இல்லாதது பாகிஸ்தானுக்கு சாதகமான ஒன்று என ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், தனி ஒரு வீரராக அணிக்கு வெற்றியை தேடித் தரக்கூடியவர் விராட் கோஹ்லி.

நெருக்கடியை திறம்பட கையாளக்கூடியவர், வேறு எந்தவொரு வீரராலும் அவ்வளவு சிறப்பாக செயல்பட முடியாது.

எனவே கோஹ்லி இல்லாதது எங்களுக்கு சாதகமே, ஐக்கிய அரபு எமீரகத்தில் அடிக்கடி விளையாடியுள்ளோம், அங்குள்ள நிலை குறித்து நாங்கள் அறிவோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்