அஸ்வினை அழைத்து கோஹ்லி பேச வேண்டும்! இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் தலைவரான கோஹ்லி, பொறுமையற்று நிலையில் இருக்கும் அஸ்வினை அழைத்து பேச வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததால், அந்தணி தொடர்ந்து கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கங்குலி, அஷ்வின் பொறுமையில்லாமல் இருக்கிறார். அவரை அழைத்து தலைவர் கோஹ்லி பேச வேண்டும்.

அஷ்வினை விட மொயின் அலி பெரிய திறமைசாலி கிடையாது. மொயின் அலியை விட இருமடங்கு அஷ்வின் திறமைசாலி. ஆனால் மொயின் அலி எளிமையாக வீசி நான்காவது டெஸ்ட் போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டார்.

ஆடுகளத்தில் இருந்த ரப் பேட்ச்சஸில் (ஆடுகளம் பிளாட்டாக இல்லாத இடம்) பந்துகளை பிட்ச் செய்து, அதை பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆனால் அஷ்வின் அதை செய்வதை விடுத்து, 6 பந்துகளையும் 6 விதமாக வீசுகிறார். வெளிநாடுகளில் ஆடும்போது ரப் பேட்சஸை பயன்படுத்துவதை விடுத்து, தூஸ்ராவையும் லெக் ஸ்பின்னையும் அஸ்வின் வீசினார் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்