இப்படியும் ரன் அவுட் ஆக முடியுமா? பரிதாபமாக வெளியேறிய கிரிக்கெட் வீரரின் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் போட்டியில், துடுப்பாட்ட வீரர் வித்தியாசமாக ரன் அவுட்டான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தில் கவுண்டி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் லன்காஷைர் மற்றும் வோர்செஸ்டெர்ஷைர் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்து வருகிறது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய வோர்செஸ்டெர்ஷைர் அணி முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய லன்காஷைர் அணி 161 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

இந்நிலையில் இப்போட்டியில் லன்காஷைர் அணி முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தின் போது, அந்த அணியின் தொடக்க வீரர் அலெக்ஸ் டேவிஸும் தலைவர் விலாஸும் களத்தில் இருந்தனர்.

அப்போது ஜோஷ் டங்க் வீசிய பந்தை டேவிஸ் அடிக்க, அது பந்து வீச்சாளராக்கு நேராக வந்தது. பந்து வீச்சாளர் பந்தை கண்டு காலைத் தூக்க, அந்த பந்து அவரது காலில் பட்டு ஸ்டம்பை தாக்கியது.

அந்த நேரத்தில் கிரீஸை விட்டு வெளியே நின்றதால் விலாஸ் அவுட்டானார்.

இதுபோன்ற விக்கெட்டுகள் எல்லாம் அரிதினும் அரிதானவை. அதிலும் பந்து காலில் பட்டு சரியாக ஸ்டம்பில் அடிப்பது என்பது மிகவும் அரிது. விலாஸின் விக்கெட்டை வீழ்த்தியவுடன் எதிரணி வீரர்கள் துள்ளிக் குதித்தனர்.

அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் 61 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய வோர்செஸ்டெர்ஷைர் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 252 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழந்தது. அதன் பின் 314 ஓட்டங்கள் என்ற இலக்கை லன்காஷைர் அணி விரட்டி ஆடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்