கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைத்த இந்திய கிரிக்கெட் விரர்கள்: என்ன தெரியுமா?

Report Print Raju Raju in கிரிக்கெட்

இங்கிலாந்தில் நடந்து வரும் டெஸ்ட் தொடரில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத சாதனைகளை இந்திய வீரர்கள் படைத்துள்ளனர்.

சவுதாம்ப்டனில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 246 ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா (3/46), இஷாந்த் சர்மா (2/26), மொகமத் ஷமி (2/51) விக்கெட்களை எடுத்தனர்.

இந்தத் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்தில் சில மைல்கற்களை எட்டியுள்ளனர்.

44.2 பந்துகளுக்கு ஒரு விக்கெட் என்ற ஸ்ட்ரைக் ரேட்டை இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தத் தொடரில் வைத்துள்ளனர்.

இது இங்கிலாந்தில் கடந்த 100 ஆண்டுகளில் வருகை தந்த அணிகள் எட்டாத புதிய மைல்கல்லாகும்.

மேலும் அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்தில் வைத்திருந்த ஸ்ட்ரைக் ரேட் சாதனைகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தத் தொடரில் முந்தியுள்ளனர்.

மேலும் இந்திய அணியின் 5 பவுலர்கள் 10 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சாதனையும் இத்தொடரில் நிகழ்த்தப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்