கிரிக்கெட் விளையாட்டுகள் நடத்தப்படுவதன் நோக்கம் இதுதான்: போட்டுடைத்த கோஹ்லி

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

கிரிக்கெட் தற்போது பணம் சம்பாதிக்கும் நோக்கிலேயே பயன்பட்டு வருகிறது என மிகவும் வருத்தமடைந்து பேசியுள்ளார் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி.

100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் பல விதிமுறைகளை இங்கிலாந்து நிர்வாகம் மாற்றியமைத்துள்ளது. மேலும் இந்த போட்டிகள் 2020ம் ஆண்டுக்குள் நடத்தப்படும் எனவும் கூறியுள்ளது.

ஐந்து பந்துகள் கொண்ட ஓவர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் 10 தொடர்ச்சியான பந்துகளை வீசும் வாய்ப்பு உட்பட, போட்டிக்கான சில டிசைன்களால் பாரம்பரியமிக்கவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

புதிய சில டிசைன்களால் இளைய தலைமுறைக்கு விளையாட்டு சென்றடையும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு கூறியதற்கு கோஹ்லி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நிருபரிடம் கூறிய கோஹ்லி, நான் ஒரு புதிய வடிவத்தைப் பற்றி நினைத்து பார்க்க விரும்பவில்லை.

நான் மிகவும் விரக்தியடைந்ததாக சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் அதிகமான வடிவத்தை நோக்கி பயணித்தால் இருக்கும் வடிவத்தில் சிறப்பாக செயல்பட இயலாது.

காரணம் எனக்கான நேரத்தையும் நான் ஒதுக்க வேண்டும் இல்லையெனில் மனதளவில் பாதிக்கப்படுவேன். நேர்மையாக, எந்தவொரு புதிய வடிவமைப்பிற்கும் ஒரு கிரிக்கெட் வீரரின் சோதனை வகையாக இருக்க நான் விரும்பவில்லை.

அதே சமயம் அதை அறிமுகப்படுத்த வரும் வீரனாகவும் நான் இருக்க விரும்பவில்லை. ஐபிஎல் விளையாடும் நான், பிக் பாஸ் லீக் பார்த்து ரசிக்கவே விரும்புகிறேன்.

நம்மை விட பலம் மிக்க அணியுடன் மோதுகிறோம், இது போதாதா விளையாட்டின் ஆரோக்கியத்திற்கு.

பிக் பாஸ் லீக் போட்டிகள் இன்னும் ஐபிஎல் தரத்திற்கு வரவில்லை. இது ஒரு கிரிக்கெட் வீரராக நாங்கள் விரும்புவதுதான்.

நான் முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன் பரிசோதனையாக அல்ல. கவுண்டி கிரிக்கெட் எப்பொழுதும் என்னை மிகவும் கவர்ந்தது.

துரதிர்ஷ்டவசமாக இந்த முறை ஆட முடியவில்லை. ஆனால் எதிர்காலத்தில் மீண்டும் வர விரும்புகிறேன். பல ஆண்டுகளாக பல வீரர்களை நான் கேட்டிருக்கிறேன்,

அவர்களின் அறிவுரை என் விளையாட்டுகளை இன்னும் சிறப்பாக புரிந்து கொள்ள உதவியது. ஆதலால்தான் இதை நான் எதிர்க்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்