இங்கிலாந்து அணியை மிரட்டி எடுக்கும் இந்தியா! தேவையில்லாமல் ரிவ்யூ கேட்டு வெளியேறிய பென் ஸ்டோக்ஸ் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், அந்தணி தடுமாறி வருகிறது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சவுத்தாம்டனில் நடைபெற்று வருகிறது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. அதன் படி முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி சற்று முன் வரை 6 விக்கெட் இழப்பிற்கு 136 ஓட்டங்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

இப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களை கதி கலங்க வைத்தனர்.

வீடியோவைக் காண க்ளிக் செய்யவும்.....

அந்த வகையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸ் 23 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சமி பந்து வீச்சில் எல்பிடபில்யூ ஆனார்.

இது சரியான அவுட் என்று தெரிந்தது. இருப்பினும் ஸ்டோக்ஸ் தேவையில்லாம ரிவ்யூ கேட்டு பெளலியன் திரும்பினார். இதனால் இங்கிலாந்து அணிக்கு ஒரு ரிவ்யூ தேவையில்லாமல் போனது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்