இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அடி கொடுத்த இந்தியா! 39 டெஸ்ட்களுக்கு பின் கோஹ்லி படையில் புதுமை

Report Print Santhan in கிரிக்கெட்

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 39 டெஸ்ட் போட்டிகளுக்கு பிறகு முதல் முறையாக எந்த ஒரு மாற்றமும் இல்லாமல், இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் களமிறங்கியுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று சற்று நேரத்திற்கு முன்பு சவுத்தாம்டனில் துவங்கியது.

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன் படி ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீசினார்.

அதில் முதல் பந்திலே துவக்க வீரர் கிடான் ஜெனிங்ஸ் ஓட்டம் எதுவும் எடுக்காமல் அவுட்டாகி, இங்கிலாந்து அணிக்கு ஆரம்பத்திலே அதிர்ச்சியை கொடுத்தார்.

மேலும் கடைசியாக இந்தியா விளையாடிய 39 டெஸ்ட் போட்டிகளில் ஏதேனும் ஒரு வீரராவது மாற்றம் செய்யப்பட்டு விளையாடியது.

ஆனால் இன்று நடக்கும் போட்டியில், 3-வது டெஸ்டில் இடம்பெற்ற அதே வீரர்கள் இன்றும் இடம்பெற்றுள்ளனர். அதனால் 39 போட்டிகளுக்கு பிறகு வெற்றி பெற்ற அதே அணியுடன் இந்தியா விளையாடுகிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்