இந்தியாவுடன் மோசமான தோல்வி! மிரண்டு போய் மீண்டும் இவரை அழைத்த இங்கிலாந்து

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்ததையடுத்து, நான்காவது போட்டிக்கு வேகப்பந்து வீச்சாளர் சாம் கரனுக்கு மீண்டும் அணியில் இடம் கிடைத்துள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் நடைபெற்று முடிந்த 3 போட்டிகளில் இங்கிலாந்து அணி 2-1 என்ற முன்னிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, இந்தியாவிடம் மோசமாக தோல்வியடைந்ததால், இந்திய அணி தொடரைக் கைப்பற்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று முன்னணி வீரர்கள் பலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தொடரை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்பதால், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை மிரட்டிய சாம்கரன் நான்காவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா அணியுடன் ஏற்பட்ட தோல்வி காரணமாகவே இங்கிலாந்து அணி அவரை மீண்டும் எடுத்துள்ளதாகவும், அதுமட்டுமின்றி சாம்கரன் விளையாடிய பெரும்பாலான டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்