இங்கிலாந்து தொடரில் கொஞ்சம் கொஞ்சமாக டோனி ஸ்டைலுக்கு மாறும் கோஹ்லி! எப்படி தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் தலைவரான கோஹ்லி இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் பெரும்பாலும் மாற்றம் இருக்காது என்று கூறியுள்ளார்.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதலிரண்டு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், மூன்றாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளதால், தொடரை எந்தணி கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதற்கிடையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் காயம் காரணமாக நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார், அவருக்கு பதிலாக ஜடேஜா களமிறக்கப்படலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தலைவரான கோஹ்லி, நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பெரும்பாலும் மாற்றம் இருக்காது.

அஸ்வின் முழுவதுமாக குணமடைந்துவிட்டார்.அதனால் மாற்றத்துக்கு அவசியம் இருக்காது என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனி எப்போதும் வெற்றி பெற்ற வெற்றிக்கூட்டணியை மாற்ற விரும்பாத தலைவர், தொடரை வென்றாலும், சில நேரத்தில் வெளியில் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க முன்வர மாட்டார்.

இதனால் தற்போது கோஹ்லியும் இப்படி தெரிவித்திருப்பது கொஞ்சமாக கோஹ்லி டோனியின் பாலிசிக்கு மாறுவது போல் தெரிகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்