ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கோஹ்லி படை! தோல்வியை நோக்கி இங்கிலாந்து அணி

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் ஆக்ரோசமான ஆட்டத்தால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்கமில் நடைபெற்று வருகிறது.

இதில் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 23 ஓட்டங்களை எடுத்திருந்த இங்கிலாந்து அணி இன்று நான்காம் நாள் ஆட்டத்தை துவங்கியது.

ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்திலே இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்களை இந்திய அணியினர் அடுத்தடுத்து வெளியேற்றினர்.

வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்....

அதிலும் குறிப்பாக சமி வீசிய ஓவரை இங்கிலாந்து வீரர் போப் தடுத்தாடிய போது, பந்தானது எட்ஜில் பட்டு சிலிப் திசைக்கு சென்றது.

அப்போது கோஹ்லி அற்புதமாக பறந்து கேட்ச் பிடித்தார். அது குறித்த வீடியோவும் வெளியாகியுள்ளது. சற்று முன் வரை இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 84 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருவதால், இந்திய அணி இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அதே சமயம் முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, இந்தியாவை முடிந்த அளவிற்கு வொயிட் வாஷ் செய்ய முயற்சிப்போம் என்று ஓவர் ஆட்டம் போட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்