கெத்து காட்டிய இந்திய வீரரை அசால்ட்டாக அவுட்டாக்கிய இங்கிலாந்து வீரர்: வெளியான வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

முதல் இன்னிங்ஸில் கலக்கிய இந்திய அணியின் இளம வீரர் ரிசப் பாண்டை இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் அசால்ட்டா வீழ்த்தியுள்ளார்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்கமில் நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 329 ஓட்டங்களும், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 161 ஓட்டங்களும் எடுத்தன.

அதன் பின் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 352 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது.

இதையடுத்து 521 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வரும் இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 23 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்....

இன்னும் வெற்றிக்கு 498 ஓட்டங்கள் தேவை என்பதால், இந்திய அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியில் இளம் வீரர் ரிசப் பாண்டிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதனால் முதல் இன்னிங்ஸில் சிக்ஸர் அடித்து ஓட்டத்தை துவங்கி கெத்து காட்டினார்.

எந்த வித பயமுமின்றி இங்கிலாந்து மண்ணில் அசால்ட்டாக அறிமுக டெஸ்டிலே சிக்ஸர் அடித்து ஓட்டத்தை துவங்கிய அவரை முன்னணி வீரர்கள் பலரும் பாராட்டினர்.

இரண்டாவது இன்னிங்ஸில் அதே போன்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 1 ஓட்டங்கள் எடுத்து ரசிகர்களை ஏமாற்றினார்.

அவரை ஆண்டர்சன் எப்படி அவுட்டாக்கினார் என்பது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்