இங்கிலாந்து அணியை துவம்சம் செய்த பின் கோஹ்லி செய்த செயல்! வைரலாகும் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், கோஹ்லி சதமடித்தவுடன், மனைவி அனுஷ்காவுக்கு பிளைன் கிஸ் கொடுத்துள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்கமில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ஓட்டங்கள் குவித்து டிக்ளர் செய்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் தலைவரான கோஹ்லி சதம் 197 பந்துகளில் 103 ஓட்டங்கள் குவித்து இங்கிலாந்து அணி வீரர்களை கதிகலங்க வைத்தார்.

கோஹ்லியின் இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியும் ஒரு வலுவான இலக்கை, இங்கிலாந்து அணிக்கு நிர்ணயித்தது.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்த கோஹ்லி, மனைவி அனுஷ்காவிற்கு பிளைன் கிஸ் கொடுத்துள்ளார். அதற்கு அனுஷ்காவும் பதில் கிஸ் கொடுத்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 23 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இன்னும் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 498 ஓட்டங்கள் தேவை, அதே சமயம் இன்னும் 2 நாட்கள் உள்ளதால், இப்போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.

இருப்பினும் இங்கிலாந்து வீரர்கள் இரண்டு நாட்கள் நிலைத்து நின்று ஆடிவிட்டால், அந்தணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்