இரண்டு இன்னிங்ஸிலும் ஒரே ஸ்கோர் எடுத்த தொடக்க ஜோடி! கிரிக்கெட்டில் அரிய நிகழ்வு

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும், தவான்-ராகுல் ஜோடி 60 ஓட்டங்கள் சேர்த்த அரிய நிகழ்வு நடந்துள்ளது.

இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி டிரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய இந்திய அணி 329 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து 161 ஓட்டங்களில் சுருண்டது. அதனைத் தொடர்ந்து இந்திய அணி தற்போது 2வது இன்னிங்ஸில் ஆடி வருகிறது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களான ஷிகர் தவான் மற்றும் லோகேஷ் ராகுல் இருவரும், முதல் இன்னிங்ஸில் 18.4 ஓவர்களில் 60 ஓட்டங்கள் எடுத்தனர்.

இந்நிலையில், இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்த ஜோடி 11.2 ஓவர்கள் விளையாடி 60 ஓட்டங்கள் சேர்த்தது. இதில் தவான் 44 ஓட்டங்களும், ராகுல் 36 ஓட்டங்களும் எடுத்தனர். ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் தொடக்க ஜோடி ஒரே ஸ்கோரை எடுப்பது அரிய நிகழ்வாகும்.

இதற்கு முன்பு, 2008ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவின் கல்லீஸ்-டி வில்லியர்ஸ் ஜோடி அவுஸ்திரேலியாவிற்கு எதிராக இரண்டு இன்னிங்ஸிலும் 124 ஓட்டங்கள் சேர்த்தது.

அதன் பின்னர், 2009ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் ஹைடன்-காடிச் ஜோடி இரு இன்னிங்ஸிலும் 62 ஓட்டங்கள் எடுத்தது. இந்நிலையில் தற்போது இந்திய வீரர்களான தவான்-ராகுல் இதனை நிகழ்த்தியுள்ளனர்.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்