அவர்களை விட்டு விடாதீர்கள்... கடினமாக எதிர்கொள்ளுங்கள்: களத்தில் கர்ஜித்த விராட் கோஹ்லி!

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி பந்து வீசிக்கொண்டிருந்த போது, அணித்தலைவர் விராட் கோஹ்லி தொடர்ந்து வீரர்களை உத்வேகப்படுத்திக் கொண்டிருந்தார்.

இங்கிலாந்து-இந்தியா அணிகள் தற்போது 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 329 ஓட்டங்களும், இங்கிலாந்து 161 ஓட்டங்களும் எடுத்தன.

முன்னதாக, இங்கிலாந்து அணி துடுப்பாட்டம் செய்துகொண்டிருந்தபோது இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, பந்துவீச்சாளர்களை ஒவ்வொரு தருணத்திலும் கடுமையாக உத்வேகப்படுத்திக் கொண்டிருந்தார். அவர் கூறிய பல வார்த்தைகளில் ஸ்டம்புகளில் இருந்த மைக்குகளில் பதிவாகின.

மொகமது ஷமி வீசிய ஒரு பந்தை இங்கிலாந்து வீரர் சரியாக ஆடவில்லை. அப்போது கோஹ்லி ‘அந்த இடம்தான், அந்த இடத்திலேயே Pitch செய்’ எனக் கூறினார். பின்னர் ஷமியும் அதே இடத்தில் Pitch செய்ய ‘Brilliant ஷமி’ என கோஹ்லி அவரை பாராட்டினார்.

இங்கிலாந்து வீரர்களான குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் துடுப்பாட்டம் செய்துகொண்டிருந்தபோது, ‘அவர்களை விட்டு விடாதீர்கள். அவர்களை கடினமாக எதிர்கொள்ளூங்கள். Keep coming out them' என கோஹ்லி உரக்கமாக கத்தினார்.

அத்துடன், பும்ரா பந்துவீசும்போது கோஹ்லி Leg திசையில் கையை காட்டி, ‘நான் அஸ்வினை அந்த இடத்திற்கு நகர்த்துகிறேன். Short Pitch பந்துகள் அங்கு செல்லும்’ என்று கூறினார்.

மேலும் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து ஆடிக்கொண்டிருந்தபோது, ‘இன்னும் ஒரு விக்கெட் தான் பாய்ஸ்.. நமக்கு தேவை இன்னும் ஒரே விக்கெட்’ எனக் கூறினார் கோஹ்லி.

இவ்வாறாக, விராட் கோஹ்லி தொடர்ந்து தனது அணி பந்துவீச்சாளர்கள் உத்வேகப்படுத்திக் கொண்டிருந்ததன் விளைவாக இங்கிலாந்து அணி 161 ஓட்டங்களிலேயே சுருண்டது.

Reuters

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்