ஒரே இன்னிங்ஸில் 5 கேட்ச் பிடித்து அசத்திய ரிஷப் பண்ட்: பாராட்டிய சச்சின்

Report Print Kabilan in கிரிக்கெட்

தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே 5 கேட்சுகளை பிடித்து அசத்திய இந்திய வீரர் ரிஷப் பண்டிற்கு, முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில், இந்திய அணியின் அபார பந்துவீச்சினால் இங்கிலாந்து அணி 161 ஓட்டங்களில் சுருண்டது.

ஹர்திக் பாண்டியா தனது மிரட்டலான பந்துவீச்சினால், டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அத்துடன் தனது அறிமுக டெஸ்டில் விளையாடிய ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்டார்.

கேட்சுகளை பறந்து பறந்து பிடித்த அவர், அறிமுக போட்டியிலேயே ஐந்து கேட்ச் பிடித்த வீரர்களின் பட்டியலில் இணைந்தார். இந்நிலையில், இந்திய முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஹர்திக் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் இருவரையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.

Getty

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்