இங்கிலாந்து அணியை கதறவிடும் இந்தியா! பேசிய வாய்களுக்கு பந்து வீச்சு மூலம் பதிலடி கொடுத்த பாண்ட்யா

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், பாண்ட்யாவின் அற்புதமான பந்து வீச்சால், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 161 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்கமில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, 329 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அணியின் தலைவரான கோஹ்லி 97 ஓட்டங்கள் எடுத்து 3 ஓட்டங்கள் எடுக்க முடியாமல் நூலிழையில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இதையடுத்து இரண்டாம் நாளில் முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணிக்கு பாண்ட்யா கடும் சவாலாக இருந்துள்ளார். பண்ட்யாவின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 161 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் துவக்க வீரர் குக் அதிகபட்சமாக 29 ஓட்டங்களும், ஜோஸ் பட்லர் 39 ஓட்டங்களும் எடுத்தனர்.

இப்படி இங்கிலாந்து அணியை கதறவிட்ட பாண்ட்யா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இங்கிலாந்து தொடரில் பாண்ட்யாவின் ஆட்டம் சரியில்லை எனவும், அவர் எல்லாம் ஏன் அணிக்கு இருக்கிறார் என்று பலரும் விமர்சித்து வந்தனர்.

ஆனால் தற்போது அதை உடைக்கும் வகையில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, பேசிய வாய்களுக்கு பூட்டை போட்டுள்ளார்.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்