இந்திய அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள்: மீண்டும் முரளிதரனுக்கு அடுத்த இடத்தை பிடித்த ஆண்டர்சன்

Report Print Kabilan in கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எதிராக 100 விக்கெட்டுகள் வீழ்த்திய 2வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஆண்டர்சன் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்களின் பந்துவீச்சு எடுபடவில்லை.

இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன், ஆட்டத்தின் 87வது ஓவரை வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் அவர் ஹ்ர்திக் பாண்டியாவை வீழ்த்தினார். இதன்மூலம், இந்தியாவிற்கு எதிராக மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜேம்ஸ் ஆண்டர்சன் பெற்றார்.

அதன் பின்னர், இரண்டாம் நாளான இன்று ஆண்டர்சன் மேலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

முதலிடத்தில் இலங்கையின் முத்தையா முரளிதரன் 105 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 3வது இடத்தில் இம்ரான் கானும்(94 விக்கெட்டுகள்), 4வது இடத்தில் மால்கம் மார்ஷலும்(76 விக்கெட்டுகள்) உள்ளனர்.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்