கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த அவுஸ்திரேலிய வீரர்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன், அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்த மிட்செல் ஜான்சன், கடந்த 2015ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் பிக்பாஷ், ஐ.பி.எல், பாகிஸ்தான் சூப்பர் லீக் போன்ற டி20 தொடர்களில் விளையாடி வந்தார்.

அவர் பார்மில் இல்லை என்பதால் விரைவில் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஜான்சன் தற்போது அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பெர்த் நவ் எனும் இதழில் அவர் கூறுகையில், ‘முடிந்துவிட்டது. நான் என் கடைசி பந்தை வீசிவிட்டேன். கடைசி விக்கெட்டையும் எடுத்துவிட்டேன். இன்று முதல் எல்லா விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதை அறிவிக்கிறேன்.

அடுத்த ஆண்டு வரை டி20 தொடர்களில் விளையாட முடியும் என்று மனதளவில் எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால், எனது உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை. ஒருவேளை அப்படி விளையாடி, 100 சதவிதம் அணிக்கு ஒத்துழைப்பு தரமுடியவில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது.

கிரிக்கெட்டில் எனக்கு அனுபவங்கள் கிடைத்திருக்கிறது. ஆனால் பயிற்சியளிக்கும் அளவுக்கு அனுபவங்கள் இல்லை’ என தெரிவித்துள்ளார். மிட்செல் ஜான்சன் 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 313 விக்கெட்டுகளையும், 153 ஒருநாள் போட்டிகளில் 239 விக்கெட்டுகளையும், 30 டி20 போட்டிகளில் 38 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்