இங்கிலாந்தில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கோஹ்லி-ரகானே நிகழ்த்திய சாதனை

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், கோஹ்லி-ரகானே ஜோடி 150 ஓட்டங்களுக்கு மேல் சேர்த்தது.

இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது. முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 307 ஓட்டங்கள் எடுத்தது.

முன்னதாக, இந்திய அணி 82 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது ரகானே களமிறங்கினார். கோஹ்லி-ரஹானே ஜோடி சிறப்பாக விளையாடி ஓட்டங்களை குவித்தது. இந்த ஜோடி நிதானமாக விளையாடினாலும், அவ்வப்போது பந்துகளை பவுண்டரிக்கும் விரட்டியது.

இருவரும் அரைசதம் கடந்தனர். ரகானே 81 ஓட்டங்களிலும், கோஹ்லி 97 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 159 ஓட்டங்களை சேர்த்தது. இதன்மூலம் இங்கிலாந்தில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வீரர்கள் ஜோடி ஒன்று 150 ஓட்டங்களை கடந்துள்ளது.

இதற்கு முன்பு, கடந்த 2002ஆம் ஆண்டு சஞ்சய் பங்கர்-ராகுல் டிராவிட் ஜோடி லீட்ஸ் மைதானத்தில் 170 ஓட்டங்கள் எடுத்தது. மேலும், டிராவிட்-டெண்டுல்கர் ஜோடி 150 ஓட்டங்களையும், டெண்டுல்கர்-கங்குலி ஜோடி 249 ஓட்டங்களையும் எடுத்துள்ளனர்.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்