சூதாட்ட புகாரில் சிக்கிய பாகிஸ்தான் வீரர்: 10 ஆண்டுகள் தடை விதிப்பு

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாம்ஷெட்டுக்கு சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக 10 ஆண்டு காலம் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீர் ஜாம்ஷெட், கடந்த 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடினார். அப்போது சூதாட்ட புகாரில் அவருக்கு தொடர்புள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்திய விசாரணையில் ஜாம்ஷெட் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 10 ஆண்டு காலம் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஜாம்ஷெட்டுக்கு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘ஜாம்ஷெட் மீதான சூதாட்ட புகார்கள் உண்மையானவை என தெரிய வந்துள்ளது. எனவே, எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட அவருக்கு 10 ஆண்டு காலம் தடை விதிக்கப்படுகிறது.

மேலும், இதில் தொடர்புடைய ஷர்ஜில் கான் மற்றும் காலித் லத்தீப் ஆகியோருக்கு 5 ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளனர்.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers