இலங்கை டி20 கிரிக்கெட் தொடருக்கு 4 பயிற்சியாளர்கள் நியமனம்

Report Print Kabilan in கிரிக்கெட்

இலங்கையில் வருகிற 21ஆம் திகதி தொடங்க உள்ள டி20 தொடரில் கலந்துகொள்ளும் நான்கு அணிகளுக்கு பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கிரிக்கெட் வாரியம் சார்பில் டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் கொழும்பு, கண்டி, தம்புல்லா, காலே ஆகிய அணிகள் கலந்துகொள்கின்றன. இந்த அணிகளுக்கு தினேஷ் சண்டிமால், ஏஞ்சலோ மேத்யூஸ், திசாரா பெரேரா, சுரங்க லக்மல் ஆகியோர் தலைமை தாங்குகின்றனர்.

இந்நிலையில், இந்த நான்கு அணிகளுக்கும் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காலே அணிக்கு Roy Diasவும், கொழும்பு அணிக்கு Avishka Gunawardenaவும், கண்டி அணிக்கு Piyal Wijetungaவும் மற்றும் தம்புல்லா அணிக்கு Sumithra Waranakulasuriyaவும் செயல்பட உள்ளனர்.

இந்த தொடர் வருகிற 21ஆம் திகதி முதல் செப்டம்பர் 2ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்