இந்திய அணியை வொயிட்வாஷ் செய்ய முடியுமா? இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் சொன்ன பதில்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியை நாங்கள் குறைத்து எடை போடமாட்டோம் என்று இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவ் கூறியுள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

அதே சமயம் இங்கிலாந்து மண்ணில் சொதப்பி வரும் இந்திய அணி கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பரான ஜானி பேர்ஸ்டோவ், இந்திய அணியை குறைத்து எடை போட மாட்டோம்.

டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியாவை ஒயிட்வாஷ் செய்துவிட முடியும் என்பதை இப்போதே கணிக்க முடியாது.

அதுமட்டுமின்றி டெஸ்ட் தரவரிசையில் உலகின் முதல் நிலை அணியாக இந்தியா இருப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

இந்தத் தொடர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே, இந்தியாவை ஒயிட்வாஷ் செய்வதைப் பற்றி இப்போதே கூற இயலாது. வானிலை சீராகி அடுத்த போட்டி நடைபெறும் மைதானம் வறட்சி அடையளாம்.

தொடர் வெற்றியை நோக்கி நெருங்கி விட்டதாக இப்போதே நாங்கள் ஆசுவாசம் அடையப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்