பென் ஸ்டோக்ஸால் இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்ட தலைவலி

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அடிதடி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், அந்த அணிக்கு தற்போது தலைவலி ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தற்போது அடிதடி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து உத்தேச அணியில் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸுக்கு பதிலாக ஆடிய ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ், அபாரமாக சதமடித்து அசத்தினார். இந்நிலையில், பென் ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்பியுள்ளதால் அணியில் இருந்து யாரை நீக்குவது என்னும் நெருக்கடிக்கு இங்கிலாந்து உள்ளாகியுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் கூறுகையில், ‘எல்லோரும் சிறப்பாக விளையாடுகிறார்கள். யாரை உட்கார வைப்பது என்று யோசிப்பது கடினம். இது சுகமான தலைவலி’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers