இந்திய அணியை பாவம் பார்க்காமல் அடிக்கும் இங்கிலாந்து! ஹோட்டல் அறைக்குள் முடங்கிய இந்திய வீரர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால், இந்திய வீரர்கள் அறைக்குள் முடங்கி கிடப்பதாக கூறப்படுகிறது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடந்த முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததால், கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்கம்மில் வரும் 18-ஆம் திகதி தொடங்குகிறது.

இந்திய அணி நாட்டிங்கம்முக்கு ஏற்கெனவே சென்றடைந்துவிட்டது. ஆனால் போட்டி தொடங்க இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கின்ற நிலையில், இந்திய அணி இன்னும் வலைப்பயிற்சியில் ஈடுபடாமல் தங்களது ஹோட்டல் அறைகளிலேயே முடங்கி இருக்கின்றனர்.

தோல்வியில் இருந்து வெளியே வர வேண்டும் என்றால் ஹோட்டல் அறைகளில் இருந்து வெளியேறி மைதானத்துக்கு வந்து பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

லார்ட்ஸ் தோல்விக்கு பின்பு இந்திய அணியை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்