இங்கிலாந்து மண்ணில் மானத்தை காக்க இந்திய அணி என்ன செய்ய வேண்டும்? கங்குலி சொன்ன முக்கிய அட்வைஸ்

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி முழுமையாக தொடரை இழக்காமல் இருக்க வேண்டும் எனில் ஒவ்வொரு வீரரும் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. அதுமட்டுமின்றி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 0-2 என பின் தங்கியுள்ளது.

இப்படியே சென்றால், இந்திய அணி 0-5 என்று தொடரை இழக்க நேரிடும் எனவும் கூறப்படுகிறது.

அப்படி இந்திய அணி முழு தொடரையும் இழக்காமல் இருக்க வேண்டும் என்றால், இந்திய வீரர்கள் இதை செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி கூறியுள்ளார்.

அவர், இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

நடப்பு டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாக இழக்காமல் இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு வீரர்களும் தங்களை முன்னேற்றி கொள்ள வேண்டும். இந்திய அணி தன்னை முன்னேற்றி கொள்ளாத பட்சத்தில் நிச்சயமாக முழு தொடரையும் இழக்கும் நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்