கோஹ்லி-ரவிசாஸ்திரிக்கு மிகப் பெரிய ஆப்பு வைக்க காத்திருக்கும் பிசிசிஐ! என்ன தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி சொதப்பி வருவதால், கோஹ்லி மற்றும் ரவிசாஸ்திரியின் அதிகாரங்களை குறிப்பிட்ட அளவு குறைப்பதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஒருநாள், டி20 மற்றும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என மூன்று தொடர்களில் விளையாடி வருகிறது.

இதில் டி20 தொடரை இந்திய அணியும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணியும் கைப்பற்றியுள்ள நிலையில் இரு அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

நடைபெற்று முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியடைந்தது.

இதனால் கோஹ்லி உட்பட இந்திய அணியில் உள்ள பலரும் கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் கோஹ்லி மற்றும் ரவிசாஸ்திரியின் அதிகாரத்திற்கு ஆப்பு வைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது, கோஹ்லியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்போதைய பயிற்சியாளர் அனில் கும்ளே பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து கோஹ்லியின் விருப்பமான பயிற்சியாளரான ரவி சாஸ்திரி பதவி ஏற்றார்.

இதைதொடர்ந்து கோஹ்லி, ரவி சாஸ்திரியின் விருப்பமான குழுவினரை பொறுப்பேற்க வைத்தார்.

ஆனால்ரவி ர்விசாஸ்திரி குழு பொறுப்பேற்ற பின், தற்போது வரை இந்திய வீரர்கள் 50 கேட்சுகளை கோட்டைவிட்டுள்ளனர்.

இதனால், தலைவர் கோஹ்லி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரின் அதிகாரங்களை குறிப்பிட்ட அளவு குறைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்