இந்திய வீரர்களுக்கு ஆதரவாக இங்கிலாந்து மண்ணில் ஒலித்த குரல்

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

லார்ட்ஸில் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது.

1974-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் சந்தித்த மோசமான தோல்வி இதுவாகும்.

இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இதனால், இந்திய அணி போராட்டம் இல்லாமல் இங்கிலாந்து அணியிடம் பணிந்தது பரவலாக கடும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது.

மேலும், இந்திய வீரர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் போராடியிருந்தால் இந்த அளவுக்கு மோசமான ஆட்டம் அமைந்திருக்காது என விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்திய அணி வீரர்களுக்கு ஆதரவாக இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டிரெவொர் பேலிஸ் குரல் கொடுத்துள்ளார்.

இவர் கூறியதாவது, அவுஸ்திரேலியா, இந்தியா இங்கிலாந்து போன்ற நாடுகள் அதிக அளவில் கிரிக்கெட் விளையாடுகின்றன.

நேரடியான போட்டிகளை காட்டிலும் பயிற்சி ஆட்டங்களை ஒவ்வொருவரும் விரும்புவார்கள். உடனடியாக ஒரு நாட்டில் சூழ்நிலையில் பொருந்திவிட முடியாது. இன்னும் நிறைய பயிற்சி ஆட்டங்கள் இருந்திருக்க வேண்டும்.

பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகும் போது நிச்சயம் அவர்களுக்கு அதனை எதிர்கொள்வதில் சிக்கல் இருக்கும். எந்த ஒரு அணியும் தனக்கு பழக்கப்படாத மைதானத்தின் தன்மையையும், பந்துவீச்சையும் எதிர்கொள்ளும் போது அந்த அணி திணறுவது இயல்புதான் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்