இது வருத்தமாக உள்ளது: ஸ்ரேயாஸ் ஐயர்

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா, இரண்டாவது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இதனை தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், மயங்க் அகர்வால், பிருத்வி ஷா, விஹாரி போன்றோரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் கூறுகையில், பொறுமையாக இருக்க வேண்டும், சிறப்பாக விளையாடினாலும் இந்திய அணியில் தேர்வாகாதது வருத்தத்தை தருகிறது, அது மட்டுமே மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.

தரமான பந்துவீச்சாளர்களை சந்திக்கும் போது உங்களது பங்களிப்பு ஏற்ற இறக்கத்தை சந்திக்கிறது, இதை எதிர்கொள்ள கவனத்துடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய ஏ அணியின் அணித்தலைவராக செயல்பட்ட போது தனது குணநலன்கள் முற்றிலும் மாறியதாகவும், சிக்கலான தருணங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்