யாரும் செத்துவிட மாட்டார்கள்: பிரபல வீரரின் காட்டமான பதில்

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

ஆசிய கிண்ணப் போட்டிகளில் இந்தியா அடுத்தடுத்த நாள் விளையாடுவதால் எந்த பிரச்சனையும் இல்லை என அவுஸ்திரேலிய முன்னாள் வீரரான டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கும் ஆசிய கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 15ம் திகதி தொடங்கி 28ம் திகதி முடிவடைகிறது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி என 6 அணிகள் இதில் பங்கேற்கிறது.

தகுதிச்சுற்று ஆட்டங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஏமன், நேபாள், மலேசியா, ஹாங்காங் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இதில் வெற்றி பெறும் அணி ஏ பிரிவில் இடம் பெறும்.

தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் 18ம் திகதி மோதும் இந்தியா, அடுத்த நாளே பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இதற்கு முன்னாள் வீரரான ஷேவாக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இவருக்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் அவுஸ்திரேலிய வீரரும், வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ், நாங்கள் விளையாடும் போது நிறைய அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடி இருக்கிறோம்.

இப்போது ஏன் புகார் கூறுகிறார்கள்? தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் விளையாடுவது இல்லையா?

இந்தியா அடுத்தடுத்து விளையாடுவதில் எந்த பிரச்சனையையும் நான் பார்க்கவில்லை.

இப்போதெல்லாம் வீரர்கள் நம்பமுடியாத உடற்தகுதியுடன் இருக்கின்றனர், ஒன்றும் ஆகாது, யாரும் செத்துவிட மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்