ஜாம்பவான் சச்சினை முந்தினார் விராட் கோஹ்லி: என்ன சாதனை தெரியுமா?

Report Print Raju Raju in கிரிக்கெட்
249Shares

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், சதம் விளாசிய கோஹ்லி சர்வதேச அளவில் சச்சினை விட சிறந்த பேட்ஸ்மேன் என அவரது புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதன் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. இதில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் வரிசையாக சொதப்பினர். ஆனால் அணித்தலைவர் கோஹ்லி மட்டும் தனி ஒருவனாக இந்திய அணி எடுத்த ஒட்டு மொத்த ஓட்டங்களில் பாதிக்கு மேல் சேர்த்தார்.

இந்நிலையில் சர்வதேச அளவில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என கருதப்படும் சச்சினைவிட கோஹ்லி சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்துள்ளார்.

தற்போது கோஹ்லி ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

அதாவது கோஹ்லி தற்போது வரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 22 சதங்களுடன் 5754 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

அதே வேளையில் இந்திய அணி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய போது 18 சதங்களுடன் 5167 ஓட்டங்களே எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்