இப்போ உங்கள் கோஹ்லி எங்க போனார்? இந்திய அணி வீரர்களின் பேருந்தின் முன்பு நின்று கிண்டல் செய்த ரசிகர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தியா-இங்கிலாந்து அணிக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதையடுத்து, அந்நாட்டு ரசிகர்கள் இந்திய அணி வீரர்களை குறிப்பாக கோஹ்லியை கிண்டல் செய்யும் விதமாக ஆட்டம் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

இந்திய அணியின் தோல்விக்கு கோஹ்லியும் ஒரு காரணம் என்று முன்னணி வீரர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் போட்டி முடிந்து பேருந்தில் இருந்த இந்திய வீரர்களை நோக்கி இங்கிலாந்து வீரர்கள் கிண்டல் செய்யும் விதமாக ஆட்டம் போட்டனர்.

ஏனெனில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர் கோஹ்லி 149 ஓட்டங்கள் குவித்து இந்திய அணியை சரிவில் இருந்து கொண்டு சென்றார்.

சதம் போட்ட அவர் தன்னுடைய மகிழ்ச்சியை ஆக்ரோசமாக வெளிப்படுத்தினார். இது மட்டுமின்றி ரூட்டை இந்த போட்டியில் ரன் அவுட்டாக்கியவுடன் அவரை கிண்டல் செய்யும் விதமாக செய்கை செய்தார்.

அதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடி 51 ஓட்டங்கள் எடுத்தார். ஆனால் அவரால் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.

கடந்த ஆண்டு இங்கிலாந்து மண்ணில் சொதப்பிய கோஹ்லி, தற்போது முதல் டெஸ்ட் போட்டியிலே சதம் அடித்து விமர்சனத்திற்கு முற்றுப் புள்ளி வைத்த இவரை பலரும் பாராட்டினார். இவர் இனி எல்லா சாதனைகளையும் முறியடிப்பார் என்று புகழ்ந்து தள்ளினர்.

இப்படி இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்து அணிக்கே தோல்வி பயத்தை கோஹ்லி படை காட்டியதால், இங்கிலாந்து ரசிகர்கள் சற்று கலக்கத்தில் இருந்தனர்.

இறுதியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுவிட்டதால், இங்கிலாந்து ரசிகர்கள் சிலர் இந்திய அணி வீரர்கள் இருந்த பேருந்தில் அருகில் நின்று கொண்டு எங்கே உங்க கோஹ்லி, எங்களிடம் ஆண்டர்சன் இருக்கிறார் என்று கிண்டல் செய்து ஆட்டம் போட்டுள்ளனர்.

அது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்