இவ்ளோ தப்பு செஞ்சா எப்படி ஜெயிக்க முடியும்: தோல்விக்கு பின் புலம்பி தள்ளிய இலங்கை வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் குழந்தைகள் போல் விளையாடியது தான் தோல்விக்கு காரணம் என்று இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணி, இலங்கையில் சுற்றுப்பயண்ம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றிருந்தது.

இதையடுத்து நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்று 2-0 என்று வென்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியின் தோல்விக்கு பின் பேசிய இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா, குழந்தைகள் விளையாடியதை போல விளையாடிவிட்டோம்.

எங்களுடைய பீல்டிங் இன்று அப்படித்தான் இருந்தது. போட்டி முழுவதும் நாங்கள் தவறு செய்துகொண்டே இருந்தோம். வெற்றி பெற வேண்டுமானால் அதிகத் தவறுகள் செய்யக் கூடாது.

ஒரு போட்டியில் இரண்டு மூன்று தவறுகள் அறியாமல் செய்யலாம். தொடர்ந்து அதையே செய்துகொண்டிருந்தால் எப்படி வெல்ல முடியும் கடந்த சில போட்டிகளில் நான் சரியாக ஆடவில்லை என்றாலும் எனது டெக்னிக்கை இப்போது மாற்றத் தொடங்கியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்