அஸ்வினின் பந்துவீச்சு அபாரம்: புகழ்ந்து தள்ளிய இங்கிலாந்து வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்து- இந்தியா அணிகள் இடையேயான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 4 விக்கெட் வீழ்த்தியதை, இங்கிலாந்து வீரர் ஜென்னிங்ஸ் வெகுவாக பாராட்டியுள்ளார்.

பர்மிங்காமில் தொடங்கிய இந்தியா- இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது. முதல் நாளான நேற்று இங்கிலாந்து 88 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ஓட்டங்கள் எடுத்தது.

ஜோ ரூட் 80 ஓட்டங்களும், பேர்ஸ்டோவ் 70 ஓட்டங்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இங்கிலாந்து ஆடுகளங்கள் பொதுவாக வேகப்பந்து வீச்சுக்கே சாதகமாக இருக்கும். ஆனால், முதல் நாளிலேயே சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான ஜென்னிங்ஸ், நான்கு விக்கெட்டுகள் வீழ்த்திய அஸ்வினை பாராட்டியுள்ளார்.

அவர் கூறுகையில், ‘அஸ்வின் மிகவும் சிறந்த பந்துவீச்சாளர். அவர் சரியான இடத்தில் பந்தை வீசினார். மேலும், வேகத்திலும் மாறுபாடு இருக்கும். பந்து நன்கு திரும்பும் ஆடுகளத்தில் நிறைய பந்துகள் விக்கெட்டை வீழ்த்தும் வகையில் இருக்கும்.

அதுபோன்ற பந்தில் அலெஸ்டர் குக்கை Bold ஆக்கினார். காலை வேளையில் இருந்து ஆடுகளத்தில் துடுப்பாட்டம் செய்ய சற்று கடினமாக இருந்தது. நாங்கள் 300 ஓட்டங்களுக்கு மேல் எடுப்போம் என்று கருதுகிறேன்.

அப்படி எடுத்துவிட்டால், எங்களது பந்துவீச்சாளர்கள் சரியான திசையில் நெருக்கடி கொடுப்பார்கள். அதே வேளையில் இரு அணிகளும் துடுப்பாட்டம் செய்த பிறகு தான், எது நல்ல ஸ்கோர் என்பது தெரியும்’ என தெரிவித்துள்ளார்.

GETTY IMAGES
PTI

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்