ரூட்டை துல்லியமாக ரன் அவுட்டாக்கி கிண்டல் அடித்த கோஹ்லி! துள்ளிக் குதித்த அஸ்வின்

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ரூட்டை ரன் அவுட்டாக்கிவிட்டு கோஹ்லி கிண்டல் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாம் நகரில் நடை பெற்று வருகிறது.

இதில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணியில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்து கொண்டே இருந்தாலும், அணியின் தூணாக ரூட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

இந்திய அணி வீரர்களின் பந்து வீச்சை எளிதாக சமாளித்தார். இதனால் அரைசதம் அடித்து 80 ஓட்டங்கள் எடுத்த நிலையில், ரன் ஓட முயற்சித்தார்.

அப்போது அற்புதமாக பீல்டிங் செய்த கோஹ்லி, துல்லியமான முறையில் ரன் அவுட்டாக்கினார். அவுட்டாக்கியவுடன் அவரை கிண்டல் செய்யும் விதமாக கோஹ்லி கொண்டாடினார்.

அதுமட்டுமின்றி இந்திய அணிக்கு தொல்லையாக இருந்த ரூட்டை அவுட்டாக்கிவுடன் பந்து வீசிய அஸ்வின் துள்ளிக் குதித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்