போடுற மாமா..தூக்கிறலாம்! இங்கிலாந்து டெஸ்டில் தமிழில் பேசி கலக்கிய தினேஷ் கார்த்திக்

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், தினேஷ் கார்த்திக் மைதானத்தில் தமிழ் பேசியது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிரிமிங்காமில் உள்ள எட்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது.

இதில் தற்போது வரை இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியின் போது 16-வது ஓவரை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வீசினார். அப்போது அந்த ஓவரை எதிர்கொண்ட ஜென்னிங்ஸ் முதல் பந்தை கீப்பரான தினேஷ் கார்த்திக்கிடம் விட்டார்.

பந்தை பிடித்த தினேஷ் கார்த்திக், நீ வேற லெவல் மாமா, போடு தூக்கிறலாம் என்று தமிழில் பேசினார். இதே போன்று அந்த ஓவரில் தமிழில் பேசியே தினேஷ் கார்த்திக், அஸ்வினை உற்சாகப்படுத்தினார்.

அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்