இது என்னுடைய கேட்ச்! மைதானத்தில் கோபப்பட்ட விராட் கோஹ்லி

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனக்கு வந்த கேட்சை ரஹானே பிடிக்க முயன்று தவறவிட்டதால், இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி கோபமடைந்தார்.

இங்கிலாந்து- இந்தியா அணிகள் பர்மிங்ஹாமில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடி வருகிறது.

இந்நிலையில், இன்னிங்ஸின் 6வது ஓவரை இஷாந்த் ஷர்மா வீசினார். அந்த ஓவரில் 3வது பந்தை எதிர்கொண்ட இங்கிலாந்து வீரர் ஜென்னிங்ஸ் அடித்தார். அந்த பந்து ஸ்லிப் திசையில் நின்றிருந்த கோஹ்லிடம் கேட்சாக சென்றது.

அப்போது மற்றொரு இந்திய வீரர் ரஹானே பாய்ந்து அந்த பந்தை பிடிக்க முயன்று நழுவவிட்டார். இதனால் கோபமடைந்த விராட் கோஹ்லி, ‘Its my catch' என கோபத்துடன் ரஹானேவைப் பார்த்து கூறினார்.

ஸ்டம்ப்பில் இருந்த மைக்கில் கோஹ்லியின் குரல் தெளிவாக ஒலித்தது. அதன் பின்னர், 7வது ஓவரை வீசிய அஸ்வின், மற்றொரு தொடக்க வீரரான அலெஸ்டர் குக்கின் விக்கெட்டை வீழ்த்தினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்