இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியில் இரண்டு வீரர்கள் அறிமுகம்

Report Print Kabilan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஜெயசூர்யா மற்றும் ரஜிதா ஆகிய இருவர் இலங்கை அணியில் அறிமுக வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.

இலங்கை- தென் ஆப்பிரிக்கா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. தம்புல்லாவில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி தற்போது நடந்து வருகிறது.

முன்னதாக, இலங்கை அணியில் பிரபாத் ஜெயசூர்யா மற்றும் கசுன் ரஜிதா ஆகிய இரண்டு வீரர்கள் அறிமுகமாகியுள்ளனர். இவர்கள் இருவரும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆவர். சக வீரர்கள் அவர்கள் இருவருக்கும் தொப்பி அணிவித்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, துடுப்பாட்டத்தை தெரிவு செய்து தற்போது விளையாடி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்