இங்கிலாந்தில் கோஹ்லி எப்படி விளையாடுகிறார் பாருங்க! அசிங்கப்படுத்துகிறதா அவுஸ்திரேலியா ஊடகம்?

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் கோஹ்லி தொடர்ந்து அவுட்டாவது போன்ற வீடியோவை அவுஸ்திரேலியா ஊடகம் வெளியிட்டுள்ளதால், தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் கோஹ்லி இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து அவுட்டாகிவிடுவார்.

குறிப்பாக வேகப்பந்து வீச்சாளரான ஆண்டர்சன் வீசும் பந்தில் அதிக முறை அவுட்டாவார். 10 இன்னிங்ஸில் 7 முறை பேட்டின் எட்ஜில் பட்டு பெளலியன் திரும்புவார்.

இந்நிலையில் இன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில் கோஹ்லி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அவுட்டாவது தொடர்பான வீடியோவை அவுஸ்திரேலியா ஊடகம் வெளியிட்டுள்ளதால், அந்த வீடியோ கோஹ்லி ரசிகர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்