சாதிக்க முடியாமல் தடுமாறிய டோனி: தன்னுடைய இடத்தை தியாகம் செய்த கங்குலி

Report Print Santhan in கிரிக்கெட்

டோனி சரியாக சாதிக்க முடியாமல் தடுமாறிய போது, கங்குலி தன்னுடைய இடத்தை விட்டுக் கொடுத்து அவரை சாதிக்க வைத்துள்ளார்.

இந்திய அணியில் வெற்றித் தலைவர்களில் ஒருவர் தான் கங்குலி, இவர் தலைமையிலான இந்திய அணி சாதனை வெற்றிகளை பெற்றுள்ளது.

இந்திய அணியில் அசைக்க முடியாத தூண்களாக திகழ்ந்த சச்சின், லட்சுமண், டிராவிட் அணியில் இடம் பெற்ற போது தலைவராக கங்குலி இருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் கங்குலி அளித்த பேட்டி ஒன்றில், டோனி 2004-ஆம் ஆண்டு அணியில் இடம் பெற்ற போது முதல் இரண்டு போட்டிகளில் 7-வது இடத்தில் தான் களமிறங்கினார்.

அங்கு அவர் சரியாக சாதிக்க முடியாமல் தடுமாறினார். அவருக்குள் இருந்த திறமை எனக்கு புரிந்தது, அதனால் அவருக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்தேன்.

அதன் பின் நடந்த போட்டிகளில் வழக்கமாக 7-வது இடத்தில் இறங்குவோம் என்று எண்ணி டோனி ஷார்ட்ஸ் உடன் உட்கார்ந்திருந்தார்.

நான் அவரிடம் சென்று அடுத்து நீ களமிறங்கு என்றேன். அதற்கு அவர் நீங்கள் என்றார். நான் 4-வது தாக களமிறங்கிக்கொள்கிறேன் என்று கூறினேன்.

நான் நினைத்தது போன்றே அந்த போட்டியில் எனது கணிப்பு தவறாகவில்லை அப்போட்டியில் டோனி 15 பவுண்டரி, 4 சிக்சர் என 148 ஓட்டங்கள் விளாசினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்